கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் பைத்தம்பாறை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தா.பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சர்மிளா, பைத்தம்பாறை ஊராட்சி மனற் தலைவர் கமலநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.