பேராசிரியர் க. நெடுஞ்செழியன் காலமானார்
திருச்சி பெரியார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத் தலைவராக இருந்தவர்.
உடல் நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை காலமானார்.
இன்று மாலை திருச்சி கேகே நகரிலுள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்து வரப்படுகிறது.
நாளை சனிக்கிழமை அவரது சொந்த ஊரான அன்பில் படுகையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஆசீவகமும் அய்யனார் வரலாறும் என்பன உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.