ஊர்க்காவல் படைக்கு நவ.12-ல் ஆட்கள் தேர்வு
திருச்சி மாநகர காவல் ஆணையராக G .கார்த்திகேயன், பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவண்ணம் மற்றும் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி மாநகரில் ஊர்காவல்படையை சேர்ந்த ஆளிநர்கள் முக்கிய நபர்கள் வருகையின் போது பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்செய்தல், இரவு ரோந்து போது காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் என பல்வேறு வகையில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் ஊர்காவல்படையினரின் வலுபடுத்தும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சேவை மனப்பான்மையுடன் கூடிய தன்னார்வம் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட 23 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.
அதன்படி வரும் 12.11.2022-ந்தேதி காலை 6:30 மணிமுதல் 8:30 மணிக்குள் திருச்சி மாநகரில் கே.கே.நகர் காவல்நிலையம் அருகில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர ஊர்காவல்படையில் சேர விரும்பும் தகுதியுடைய நபர்கள் கீழ்கண்ட அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி மாநகர ஊர்காவல்படையில் சேர தகுதிகள்:
- பத்தாம் வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி (அ) தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
- உயரம் ஆண்-165 செ.மீ, பெண் – 155 செ.மீ இருக்க வேண்டும்.
- திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.
- எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் சம்மந்தப்பட்டவராக இருக்க கூடாது.
மேலும் திருச்சி மாநகரில் ஊர்காவல்படையில் சேர்ந்து பணியாற்றிட மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் நேரில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.