சமயபுரம் வாரச்சந்தையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

0 476
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆடு வாரச் சந்தையில் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆடு வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதியிலிருந்து ஆடுகளை விற்கவும் வாங்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.கடந்த 5 ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா கொடிக்கால் பட்டியை சேர்ந்த குழந்தைசாமி மகன் 31 வயதான ரங்கராஜ் ஆடுகள் வாங்குவதற்காக சமயபுரம் ஆட்டு சந்தைக்கு வந்துள்ளார். அப்போது ஆட்டு சந்தை பகுதியில் தனது மோட்டார் பைக் நிறுத்திவிட்டு ஆடுவாங்க சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் 7 ந்தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை் வலைவீசி  வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.