கான்செர்ட் இசை நிகழ்ச்சி நிதியின் மூலம் தழுதாளப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடைபெற உள்ள கான்செர்ட் இசை நிகழ்ச்சியின் நிதியை கொண்டு தழுதாளப்பட்டி கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டம் …
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் வருகின்ற 18ம் தேதி நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது – இதில் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வீரசக்தி மற்றும் குழுவினர் :
இந்த கான்செட் இசை நிகழ்ச்சியை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இசை நிகழ்ச்சி ஆனது நடைபெற உள்ளது.
ஏறத்தாழ 15 ஆயிரம் நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 500 முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோலி கிராஸ் கல்லூரியில் மாணவிகள் பல்வேறு கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த இசை நிகழ்ச்சி வாயிலாக கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை தழுதாளப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் சாலை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி செலவிற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளோம்.
ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக ஏற்கனவே 28 கிராமங்களை தத்தெடுத்து நல்ல முறையில் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
எனவே இந்த இசை நிகழ்ச்சிக்கு இசை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.