லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு மூன்று வருட சிறை: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

0 419
Stalin trichy visit

திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் செல்லையா இவர் திருச்சி ஏர்போர்ட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார் இவரது ஆலையில் பணிபுரியும் முனியன் என்பவர் செல்லையா மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் அளித்த ஒரு புகாரின்பேரில் செல்லையா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 2009 ஆம் ஆண்டு திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த முருகேசன் என்பவர் 5000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் செல்லையா மீது வழக்கு பதியாமல் இருப்பதாக சொல்லியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லையா திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில்அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 11.08. 2009 அன்று முருகேசன், செல்லையாவிடம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாககைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் முருகேசன் மீதான இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைகள் முடிந்து இன்று 10.11.22 முருகேசன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் முருகேசனுக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி  கார்த்திகேயன்  உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.