கதை கேளு …. கதை கேளு…. சிறுவர்கள் சீர்மிகு கதைகளை வாசிக்கும் நிகழ்ச்சி

0 317
Stalin trichy visit

 

திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கதை கேளு கதை கேளு சிறுவர்கள் சிர்மிகு கதைகளை வாசிக்கும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில்,
கதையின் அடிப்படைக்கூறுகள்
மொழி,சைகைகள், ஒலி,
முகபாவங்கள் உள்ளிட்ட பாவங்களை குரல்களில் வேற்றுமைப்படுத்தி உரத்தும், தாழ்த்தியும் ஒலி எழுப்பி எடுத்துக்கூற வந்த கதைகளை அதே உணர்வுடன் பிறர் மனதில் பதிய வைக்கும் வகையில் கதையினை வாசிக்க வேண்டுமென்றார்.
தர்மரின் தர்மம் குறித்து பள்ளி மாணவிகள் கதையினை வாசித்தார்கள் அதில் நமக்கு தோன்றும் எண்ணம் மாறக்கூடியது எனவே நல்ல செயல்களை உடனடியாக செய்து விட வேண்டும் என்பதை மாணவர்கள் கதை மூலம் எடுத்துரைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.