பொதுமக்களுக்கு மாமன்ற உறுப்பினர் செந்தில் அன்பான வேண்டுகோள்
43-வது வார்டு மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் கூறியிருப்பதாவது,
இன்றும் மற்றும் இன்னும் இரண்டு தினங்களுக்கு கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்,
எனவே நமது வார்டு மக்கள் அனைவரும் வீட்டின் வெளியே அவசியம் இல்லாமல் வெளியே வராமல் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டியும்,
மின்சாரம் இல்லாமல் இருந்தாலோ, மழைநீர் வீடுகளுக்குள் நுழைந்தாலோ சாக்கடை அடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படியும் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.