ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
திருச்சி, நவ.18 திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூர் மாணவியர் விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் கீதா, தனி வட்டாட்சியர் ஆதிதிராவிடர் நலன் சந்திரதேவநாதன் மற்றும் விடுதி பணியாளர்கள் உள்ளனர்.