தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை…

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் 74 வயதான பெரியசாமி. இவர் கடந்த சில மாதங்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தொண்டை வலி அதிகமானதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த முதியவர் கடந்த 6 ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பின்னர் இது குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.