நிரந்தர பணி வழங்கிட அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை…

0 365
Stalin trichy visit

மணப்பாறையில் நிரந்தர பணி வழங்கிட அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை விடுத்த தூய்மை பணியாளர்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். முன்னாள் திமுக நகரச் செயலாளர் ஏ.பி.சரவணன் வீட்டிற்கு சென்ற போது அமைச்சர் வருவதை அறிந்து வந்த நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தற்போது நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறோம் எங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட அமைச்சர் விரைவில் சம்பளம் உயர்த்த உள்ளோம். ஆனால் அரசு வேலை வழங்குவது கடினம் என கூறினார். மேலும் 2000 தூய்மை பணியாளர்களை நியமிக்க உள்ளோம் அதில் ஏதும் வாய்ப்பு இருந்தால் செய்து தருகிறேன் என தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.