போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி…

0 277
Stalin trichy visit

“கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. Veranda RACE பயிற்சி மைய கிளை மேலாளர் சாந்த ஷீலா, கல்லூரியின் செயலர் அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ, முதல்வர் முனைவர் ப. நடராஜன், ஒழுங்கிணைப்பாளர் பேரா.கி.சதீஷ் குமார், உள்ளிட்ட 150 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

தொடர்ந்து பயிற்சி மையத்தின் பயிற்றுநர்கள் கார்த்திக், யுவராஜா ஆகியோர் பங்கேற்று மத்திய, மாநில போட்டித் தேர்வுகள் குறித்து விரிவாக விளக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை, வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து நடத்தினர். பிறகு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்து கலந்துரையாடி நிகழ்வை நடத்தினர். நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரையை முதல்வர் முனைவர் ப. நடராஜன் ஆற்றினார். கல்லூரிச் செயலர் Fr. லூயிஸ் பிரிட்டோ ஆசியுரை வழங்கினார். நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.