கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடைடையே தகராறு

0 573
Stalin trichy visit

குமுளூரில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடைடையே தகராறு .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு. போலீசார் குவிப்பு.

லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது வழக்கம். இந்த கிராமத்தில் வசிக்கும் இரண்டு சமுதாயத்தினரும் ஒற்றுமையாக திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மாரியம்மன் கோவிலில் தனியாக திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் தடை உத்தரவு உள்ளதாக கூறி ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து லால்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சிறுகனூர் போலீசார் இரு தரப்பினருடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஒரு தரப்பினர் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா நடத்தி வந்தனர். இதில் மற்றொரு தரப்பினர் கோர்ட் தடை உத்தரவு உள்ளதாக அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மற்றொரு தரப்பினர் திருவிழாவை தொடர்ந்து நடத்தாமல் அமைதியாக கலைந்து சென்றனர். திருவிழாக்காக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிக்குமார் உத்தரவின் படி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.