சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

0 24
CM

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீலோக நாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது.

HAPPY BIRTHDAY

சிவபெருமானுக்கு உரிய வாரம் சோமவாரம். அதுவும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சோமவாரம் மிகவும் சிறப்பானது.இந்நிலையில்திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீலோக நாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் ஆலயத்தில்
கார்த்திகை மாத முதல்
சோமவார சோமப்பிரதோஷத்தன்று 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவன் மூல மந்திர ஹோமம் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.பின்னர் சிவ பெருமானுக்கு வில்வ தலத்தினாலே ருத்ர திரிசதி அர்ச்சனை ஷேவிக்கப்பட்டு சிறப்பான முறையில் இந்த பூஜையானது நடைப்பெற்றது.இதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வோடு முதல் சோமவாரம் நிறைவு பெற்றது.இன்னும் மூன்று சோமவார நிகழ்வுகள் இந்த ஆலயத்தில் நடைபெற உள்ளது.அது சமயம் பக்த கோடிகள் அனைவரும் ஆலயத்திற்கு வந்து சிவபெருமானையும் அம்பாளையும் தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Psr Trust

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி தலைமையில் ஆலய அர்ச்சகர் செந்தில் குருக்கள், பாலசுப்பிரமணி குருக்கள்,கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!