முசிறி டி.எஸ்பி.யை பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
முசிறி போலீஸ் டிஎஸ்பியிடம் தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக பேசி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை சிறப்பாக செயலாற்றியதற்கு பாராட்டு தெரிவித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி இருப்பவர் யாஸ்மின்.முசிறி காவல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவிற்கு சென்ற புகாரில் 97 சதவீதம் அதாவது 1300 புகார்களில் 1267 புகார்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது 33 புகார்கள் மட்டுமே இன்னும் விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. உங்கள் தொகுதிகள் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார்களை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதற்காக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் முசிறி போலீஸ் டிஎஸ்பி – ஐ தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். அப்போது புகார்கள் மீது விரைந்து தீர்வு கண்டதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன் , பணிகள் குறித்தும், துறை ரீதியாக வேறு
ஏதேனும் உதவி தேவைபடுகிறதா எனவும் கேட்டறிந்தார்.