குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறுகனூர் காவல்துறையினர்.
சிறுகனூர் அருகே பி கே அகரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் சத்தியவாணி தலைமையில் திருட்டு வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுத்திட பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்களிடம் எப்படி நடந்து கொள்வது, ஆபத்து ஏற்பட்டால் உதவிக்கு யாரை அழைப்பது அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிப்பது குற்ற சம்பவங்களை தடுப்பது ஏதாவது சந்தேகம் படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்டவகளை வலியுறுத்தி பேசினார்.
இந்நிகழ்வில் சிறுகனூர் காவல் துறையினர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.