ஜெய்ப்பூரில் ஏ.பி.வி.பி. 68வது அகில பாரத மாநாடு
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP ) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் 45 லட்சம் மாணவர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகும். ABVP -யின் 68வது அகில பாரத மாநாடானது நவம்பர் 25 முதல் 27 வரை இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
துவக்க நிகழ்ச்சி:
25/11/2022,வெள்ளிக்கிழமை அன்று மாநாட்டு துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய யோககுரு.பாபாராம்தேவ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர்கள் பேசும்போது பாரதீய பண்பாடு உலகிற்கு வழிகாட்டும்.பாரதீய பண்பாட்டின் காவலர்களாக மாணவ சமுதாயம் உருவாக வேண்டும் என கூறினார்.
பேரா. யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது 2022:
ஆண்டுதோறும் இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ABVP சார்பாக பேரா. யஸ்வந்தராவ் கேல்கர் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதினை மகாராஷ்டிராவை சேர்ந்த திரு. நந்தகுமார் பல்வே அவர்கள் (நிறுவனர், சேவாசங்கல்ப் அறக்கட்டளை ) விருது பெற்றார்.இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக மத்தியகல்வித்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக செய்த சேவைகளை பாராட்டி திரு. நந்தகுமார் பல்வே அவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மற்றும் விருதும் வழங்கப்பட்டது.
திரு.தர்மேந்திரபிரதான்
தீர்மானங்கள் :
மாநாட்டில் 5 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை :
- தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த மத்திய/மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக
- பாரதீயமொழிவழி கல்வி தொடர்பாக
- மாணவர் சேர்க்கை, தேர்வு மற்றும் முடிவுகளில் உள்ள முறைகேடுகள் குறித்து 4.உள்நாட்டுப்பாதுகாப்பு தொடர்பாக
5.உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய பங்கு தொடர்பாக
ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்:
நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் அவர்களது பாரம்பரிய உடையில் ஊர்வலமாக கலந்து கொண்டனர். நிறைவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அறிவிப்புகள்:
இந்த மாநாட்டில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான ABVP -யின் அகில பாரத தலைவராக திரு. Dr. ராஜ்சரண் சாஹி அவர்களும் (லக்னோ) அகில பார்த பொதுச் செயலாளராக ஸ்ரீ. யாக்யவல்யசுக்ளா அவர்களும் (பாட்னா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து
மத்திய செயலாக்க குழு உறுப்பினர்
1.ஸ்ரீ.முத்துராமலிங்கம் (மதுரை)
தேசிய செயற்குழு உறுப்பினர்கள் :
1.ஸ்ரீ.மனோஜ் பிரபாகர்
- ஸ்ரீ.பிரேம் ( திண்டுக்கல் )
(திருச்சி )
- செல்வி. பாரதி (கன்னியாகுமரி) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால நிகழ்ச்சிகள்:
டிசம்பர் – 6 சமுதாயசமத்துவ தினம்
- டிசம்பர் -11 மகாகவி.பாரதியார் பிறந்த தினம்
- ஜனவரி மாதம் மாவட்ட மாநாடு
தற்சார்பு பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று ABVP – யின் தேசிய_செயலாக்க குழு உறுப்பினர் ஸ்ரீ. முத்து ராமலிங்கம் மற்றும்_தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ. மனோஜ் பிரபாகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.