“தமிழ்நாடு மாணவர் புத்தாக்க விருது” பெறும் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள்!
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகளின் கண்டுபிடிப்பு 2வது முறையாக தமிழ்நாடு மாணவர் புத்தாக்க விருதினை பெறுகின்றனர்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பாக தொடர்ந்து கடன் உதவிகள் வழங்குதல், சிறு குறு தொழில்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

“Swachhata Sewormtricity” என்பதின் மூலமாக பாதுகாப்பான கழிவுநீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி, பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொது கழிப்பறைகளை வழங்குவதோடு திறமையான கழிவு மேலாண்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொது கழிப்பறை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்த ஐடியாக்களை அனுப்புவது குறித்த ஒரு போட்டியினை நடத்தியுள்ளனர்.
இதில் தமிழகம் முழுவதும் 497 குழுவினர் இந்த போட்டியில் பங்கு பெற்று தங்களுடைய ஐடியாக்களை அனுப்பி உள்ளனர். இதில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சார்பாக பி.எஸ்.சி மூன்றாமாண்டு வேதியல் படிக்கும் ஹபிலா கைருன், ஆல்பின் புனிதா, சரித்திரா ஈஸ்வர்யா ஆகியோரின் படைப்பு சிறந்த ஐடியாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக ஒரு லட்ச ரூபாயும் தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர் விருதினையும் பெற்றுள்ளனர்.
இதேபோல கடந்த வருடம் பி.சி.ஏ படிக்கும் பவுலின் மோனிஷா,யோகலட்சுமி, சகாயமேரி உதயதர்ஷினி ஆகிய 4 மாணவிகளின் “ஸ்மார்ட்ஃபீல்ட் டஸ்ட்பினாலஜி” என்ற ஐடியா மூலம் தங்களுடைய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து கடந்த வருடம் வெற்றி பெற்று விருதினை பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர் விருதினை பெற்ற இரண்டு அணியின் மாணவிகளையும் கல்லூரியின் முதல்வர் Sr. கிறிஸ்டினா பிரிஜிட் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஹோலி கிராஸ் கல்லூரி சார்பாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திற்கு வெற்றிகரமான ஐடியாக்களை வழங்குவதாகவும் சிறந்த தொழில் முனைவோரை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8