மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்து பாடல்

0 334
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் சேர்ந்த நகராட்சி நடுநிலைப்பள்ளி தேவி தெரு ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்து பாட நான் பாடல் ஆனது காலையில் மாணவர்களுக்கான இறைவணக்க கூட்டத்தில் இப்பாடலானது பாடப்பெற்றது இப்பாடலானது செவித்திறன் குறைபாடு காது கேளாத மாணவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் அனைத்து மாணவர்களும் அனைத்து மாற்று திறனாளி குழந்தைகள், சக மாணவர்களும் இறைவனக்க கூட்டத்தில் காது கேளாத மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு புரிந்த சைகை மொழியில் இப்பாடலானது பாடப்பட்டது. இப்பாடலை அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் பாடி சந்தோஷம் அடைந்தனர். காது கேளாத மாணவர்கள் இப்பாடலை கண்டு புரிந்துகொண்டு இவற்றின் அர்த்தத்தை உணர்ந்து நிகழ்ச்சியுடன் இப்பாடலை பாடி சந்தோஷம் அடைந்தனர். இப்பாடலின் முக்கியத்துவத்தினை அனைத்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இப்பாடலின் முக்கியத்துவத்தை போற்றும் பொருட்டு மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இப்பாடல் பாடப்பட்டது. மேலும் இக்குழந்தைகளுக்கான மாற்று திறன் கொண்ட மாணவர்களோடு சக மாணவர்களும் இணைந்து அவர்களை வரவேற்கும் பொருட்டு சிறார் திரைப்படமானது இப்பள்ளியில் வெளியிடப்பட்டது. அனைத்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறார் திரைப்படமானது அனைத்து மாணவர்களுக்கும் காண்பிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் இந்த படத்தைக் கண்டு மகிழ்ந்தனர். இப்படத்தின் மைய கருத்துக்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது .இப்படத்தின் மூலமாக அநேகர் நல்ல கருத்துக்களை தெரிந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களை அங்கீகரித்து வாழும் எண் ணத்துடன் பாடப்பட்டது. இவற்றின் நோக்கங்கள் மற்ற சக மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் அவர்களுக்கு உணர்த்தப்படுவதாகவும் இப்படமும் பாடலும் அரங்கேற்றப்பட்டது. இதில் அனைத்து சக மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர் . படத்தின் மூலம் மற்றவர்களுக்கு உதவும் நல்ல பழக்கங்களையும் புரிந்து கொண்டனர்.இவ்விழாவை அந்த நல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் திரு.மருதநாயகம் மற்றும் திரு.ஸ்டான்லி ராஜசேகர் அவர்களும் குழந்தைகளை உற்சாகமுட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.