பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும்பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
நாடு முழுவதும் டிசம்பர்மாதம் 11ந்தேதி மரியாதைக்குரிய.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ABVP சார்பாக பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மகாகவியின் பிறந்த நாளை பாரதீய பாஷா திவாஸ் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகாகவியின் பிறந்த நாளை முன்னிட்டு ABVP திருச்சி மாநகர கிளை சார்பாக பாரதி காட்டும் பாதை என்னும் பெயரில் பள்ளியில் பயிலும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகள் மற்றும் தலைப்புகள் :
வகுப்பு பேச்சு கட்டுரை
9 ஆம் வகுப்பு பாரதீ பாரதியின் பன்முக தோற்றம்
10 ஆம் வகுப்பு பாரதீ பாரதியின் பன்முக தோற்றம்
11ஆம் வகுப்பு பாரதியும் பாரதமும் பாரதி கண்ட புதுமை பெண்
12 ஆம் வகுப்பு பாரதியும் பாரதமும் பாரதி கண்ட புதுமை பெண்
போட்டிகள் நடைபெறும் இடம் :
தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி,சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி
நாள் : 10/12/2022, சனிக்கிழமை
நேரம் : காலை 10 மணி
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 9/12 / 2022,- க்கு முன்பாக முன்பதிவு செய்தல் அவசியம்.
முன்பதிவு செய்ய – 93454 11459, 93607 12085, 83003 12833
போட்டிகள் அனைத்தும் தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி,சத்திரம் பேருந்து நிலையம், திருச்சியில் நடைபெறும்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தொடர்புக்கு : 8300312833
சந்தோஷ் குமார்
மாநகர இணை செயலாளர்
ABVP திருச்சி