திருச்சி உறையூர் லிங்கா நகரில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் பார்மலின் தடவிய 350 கிலோ மீன்களும், கெட்டுப்போன மீன்கள் 300 கிலோவுமாக ஆறு 650 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டன.

இன்று காலை நடந்த இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இதுகுறித்து ரமேஷ் பாபு கூறுகையில்… ‘திருச்சி மாவட்டத்தில் மீன் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பார்மலின் தடவியோ அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். பொதுமக்களுக்கு இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை அல்லது பார்மலின் தடவிய மீன்களை கண்டறியப்பட்டால் 9944959595 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8