திருச்சி எஸ்.பிக்கு கொரோனா – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுப்பதற்காக தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாநகரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்திக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்றதால் தொற்று பரவியதா அல்லது பொது மக்களிடம் நேரடியாக பரவியதா? என விசாரணை செய்து வருகின்றனர்