நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு!

0 581
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு மூடப்பட்டது.

இந்தநிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.