மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆமூரில் மோட்டார் ஸ்விட்சை போடுவதற்காக தொட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
முசிறி தாலுக்கா ஆமூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் 25 வயதான முரளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தொகுப்பு வீடு கட்டும் பணிகள் ஆமூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தொகுப்பு வீடு கட்டும் இடத்திற்கு நேற்றுகாலை 10 மணிக்கு மேல் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் உள்ள கரண்ட் மோட்டாரின் ஸ்விட்சை போடுவதற்காக தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முசிறி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.