துளசி, வேம்பு, கற்றாழை அமிலக்கரைசலில் மின்சாரம் தயாரிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து துளசி, வேம்பு, கற்றாழை அமிலக்கரைசலில் மின்சாரம் தயாரிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் ராகவன் திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் எட்டாம் வகுப்பு படிக்கும் தான்யா, ஆப்ரின் பானு மாணவிகள்துளசி, வேம்பு, காற்றாலை அமிலக்கரைசலில் மின்சாரம் குறித்து பேசுகையில்,
மின்னியக்கியின் காந்தப்புலத்தின் நடுவே ஓர் மின்கடத்து பொருள் சுழலும் போது அந்த சுழலும் மின் கடத்தும் பொருளில் மின்சாரம் உருவாகிறது. இதுதான் அடிப்படையான விஷயம். இது சூரியமின் சக்தி தவிர மற்ற அனைத்து வகையான மின் உற்பத்தியும் இந்த முறையிலே நடைபெறுகின்றன. அந்த மின் கடத்தும் பொருளைச் சுற்ற பல்வேறு சக்தியை உபயோகிக்கின்றோம்.
பெட்ரோல் டீசல் நிலக்கரி போன்ற புதை வடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாடு புவி வெப்பமடைதல் பசுமை குடில் விளைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கு மாற்றாக சூரிய ஒளி, காற்று, நீர் போன்ற இயற்கை கூறுகளில் இருந்து ஆற்றலை எடுக்கும் வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கிடைக்கிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எல்லா நாடுகளுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
இதில் துளசி, வேம்பு, கற்றாழை அமிலக்கரைசலில் மின்சாரம் உருவாவது குறித்து எடுத்துரைக்கின்றோம்.
துளசி, வேம்பு, கற்றாழை கரைசலை எடுத்து கண்ணாடி குழாயில் இட்டு நேர்மின் வாயாக செம்பும் எதிர் மின் வாயாக துத்தநாக தகட்டினை மூலிகை கரைசலில் வைக்கப்படுகிறது. மூலிகை கரைசலில் உள்ள வேதிசேர்ம அமில மூலகங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகி எல்இடி பல்ப் எரிகிறது என்றனர்.