தி.மு.க. அரசை கண்டித்து பூவாளூரில் நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 283
Stalin trichy visit

லால்குடி தொகுதி பூவாளூர் பேரூராட்சியில் விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்டக் கழக செயலாளர் ப.குமார்  கண்டன உரை நிகழ்த்துகிறார்

மக்கள் நலனில் அக்கறையில்லாத விடியா திமுக அரசை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்  லால்குடி தொகுதி பூவாளூர் பேரூராட்சியில். பூவாளூர் மார்க்கெட் அருகில்  நாளை(16.12.22) காலை 10 மணி அளவில் பூவாளூர் பேரூர் கழக செயலாளர் S.ஜெயசீலன்  தலைமையில் நடைபெற உள்ளது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  கண்டன முழக்கமிடுகிறார்கள்.

எனவே, கழக அனைத்து நிலை பொறுப்பாளர்களும்,  உள்ளாட்சி பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும், கழக முன்னோடிகளும், செயல் வீரர்கள், வீராங்கனைகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.