லஞ்சம் வாங்கி கைதான காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

0 460
Stalin trichy visit

லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது குடும்பத்திற்கும் அருகில் உள்ள ஜெகதீசன் என்பவ ரின் குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொ டர்பாகலால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெகதீசன் மீது கடந்த மாதம் 2-ந்தேதி போச்சோ சட்டத்தின் கீழ்லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக் குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாககோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதற்காக தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி கேட்டுள்ளார்.

இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீ சார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில், நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.