பயணிகள் நிழற்குடையில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ. பெயர் நீக்கம் : பரஞ்சோதி கட்டாம்

0 312
Stalin trichy visit

முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல பணிகளை செய்கிறார். கட்டிடங்கள், பயணிகள் நிழற்குடைகள் போன்றவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படுகின்றன.அந்த கட்டிடங்கள், நிழற்குடையின் மீது அதற்கு செலவிடப்பட்ட தொகை, யார் காலத்தில் நிறைவேற்றப்பட்டது, திறக்கப்பட்ட தேதி ஆகியவை எழுதப்பட்டிருக்கும்.அந்த கட்டிடங்கள் இருக்கும் வரை அந்த பெயர்களும் அப்படியே இருக்கும். இது தான் தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. 2006 – 11 வரை நான் ஶ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்டாகுறிச்சி ஊராட்சி ஏகிரிமங்கலம், சாத்தனூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட நிழற்குடைகளில் இருந்த எனது பெயரை தற்போதைய எம்எல்ஏ பழனியாண்டி நீக்கிவிட்டு அவரது பெயரை எழுதியிருப்பது முற்றிலும் தவறானது. ஆளுங்கட்சியின் அராஜக போக்கிற்கு இதுவே உதாரணம். இது பற்றிய நியாயங்களை பொதுமக்கள் விரைவில் உணர்வார்கள்.ஒருவர் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவர் சொந்தம் கொண்டாடும் தவறான போக்கு இது. இந்த நிலை தொடர்ந்தால் கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற்று போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்”.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.