மாற்றுத்திறனாளி இளைஞரிடம் பரிவு காட்டிய அமைச்சர் நேரு

0 316
Stalin trichy visit

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மணப்பாறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் மதியம் 12:30 மணியளவில் காரில் திருச்சி திரும்பி கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் கார் வந்து கொண்டிருந்தபோது உடையாப்பட்டி ரோட்டிலிருந்து ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் (நடக்க இயலாதவர்) கைகளால் தவழ்ந்தவாறு தேசிய நெடுஞ்சாலையை கடந்து கொண்டிருந்தார்.போக்குவரத்து இல்லாத நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இளைஞர் ஒருவர் தவழ்ந்து வருவதை கண்ட அமைச்சர் தனது காரை நிறுத்திவிட்டு அந்த இளைஞரிடம் சென்று பெயர், ஊர் போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் 3 சக்கர சைக்கிள் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக இளைஞரிடம் உறுதியளித்த அமைச்சர் தனது காரிலிருந்து பிஸ்கட், தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து அந்த இளைஞரிடம் கொடுத்தார். அந்த இளைஞர் ரோட்டை கடந்ததும் அமைச்சர் திருச்சிக்கு புறப்பட்டார். அமைச்சரின் இந்த மனிதநேயமிக்க செயலை பார்த்த அதிகாரிகள், பத்திரிகையாளர்களை நெகிழச் செய்தது

 

Leave A Reply

Your email address will not be published.