இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட ஆலோசனை கூட்டம்…

0 335
Stalin trichy visit

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் பாலக்கரையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சேக் முகமது கவுஸ் கிராத் ஓத, மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம் வரவேற்புரையாற்றி நிகழ்வை துவக்கி வைத்தார்கள்.மகளிர் அணி மாவட்ட தலைவர் முனைவர். பைரோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக் ஹஜ்ரத் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

சுதந்திர கிசான் சங்க தேசிய பொருளாளர் பாரூக் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்ச் 10 சென்னையில் நடைபெறும் தேசிய பவள விழா மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான மக்களை அழைத்துச் செல்வது,மாநாட்டு முன்னேற்பாடாக அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி தெருமுனை விளக்க கூட்டம் நடத்துவது மற்றும் அதிகமான புதிய கிளைகளை அமைப்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணை நிர்வாகிகள், இளைஞரணி,மகளிர் அணி,மாணவர் அணி, மற்றும் தொழிலாளர் அணி நிர்வாகிகள், பிரைமரி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.