பொங்கல் பரிசுத் தொகுப்பு மேயர் மு.அன்பழகன் வழங்கினார்

0 280
Stalin trichy visit

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் இன்று (09.01.2023) தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள நாச்சியார் பாளையம் நியாய விலைக் கடையில் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி  ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அபிபுல்லா, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன்,உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.