போக்குவரத்து விதிகளை மீறிய 1300 நபர்கள்வழக்குகள் பதிவு
திருச்சி மாநகரில் இன்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டியவர்கள் மீது சுமார் 1300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உத்தரவின் பேரில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு – இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அதி வேகமாக செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுபவர்கள்,காரில் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுபவர்கள்,சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்தவர்கள் என இன்று ஒரே நாளில் கண்டறியப்பட்ட சுமார் 1300 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த 84 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 8லட்சத்து 4 ஆயிரம் தொகையும் – காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 108 நபர்கள் மீது ஒரு லட்சத்து 8 ஆயிரம் அபராத தொகையும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த ஒன்பது நபர்கள் மீது 9 ஆயிரம் தொகையும் செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்கி வந்த 49 நபர்கள் மீது அபராத தொகையாக 49,000 என இன்று ஒரே நாளில் மட்டும் 1331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக மொத்தம் 12 லட்சத்து 99 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்.