பொங்கல் பரிசுத் தொகுப்பு மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் வழங்கினார்
தமிழர் திருநாள் பொங்கல் நன்நாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி திருவெறும்பூர் தொகுதி 43-வது வார்டு பர்மா காலனியில் உள்ள ரேஷன் கடையில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில், வட்டச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதாரக் குழு தலைவருமான ஓ.நீலமேகம் துவக்கி வைத்தார், இந்நிகழ்வில் கழக முன்னோடிகளும் கடை பணியாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.