பூவாளூர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

0 321
Stalin trichy visit

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பூவாளூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக லால்குடி, பூவாளூர்,பெருவளநல்லூர்,வெள்ளனூர், நன்னிமங்கலம், மயில்ரங்கம், பச்சாம்பேட்டை, திருமணமேடு, மும்முடி சோழமங்கலம், கூகூர்,அன்பில், கொப்பா வளி, வழுதியூர், சாத்தமங்கலம்,ஆனந்திமேடு,பெரியவர்சீலி, காட்டூர் கொத்தமங்கலம்,சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வம் தகவல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.