ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா
ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா நடைபெறுவதன் நோக்கம் தெரியுமா ?
சோழ மன்னனின் படை தளபதியாக இருந்து பின்னர் சிற்றசராக முடி சூட்டப்படவர் திருமங்கை மன்னன்.
பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டு பெருமாளின் பக்தர்களுக்கு உணவளிக்கும் உன்னத தொழில் ஈடுபட்டு வந்தார் – பின்னர் செல்வங்கள் இல்லாத காரணத்தால் வழிப்பறி செய்து அதில் கிடைக்கும் பணத்தை கைங்கர்யம் செய்து வந்தார்.
அந்த வகையில் ஸ்ரீரங்கத்தில் களவு செய்யும் போது பெருமாளே மனப்
மாப்பிள்ளையாக வந்ததை அரியாத திருமங்கை மன்னன் அவரின் நகைகளை திருடுகிறார் – அப்போது மனமாப்பிள்ளை கோலத்தில் இருந்த பெருமாளின் காலில் இருந்த மெட்டியை கலட்ட முடியாமல் தவித்த திருமங்கை மன்னன் ஒரு கட்டத்தில் வாயில் கடித்து கலட்ட முயற்சி செய்கிறார் – அப்போது அவர் காதுகளில் நமோ நாராயானாயா என்கிற மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.
பெருமாளே நேரில் வந்து தனது அடியாரான திருமங்கை மன்னனுக்கு அருள செய்ததால் இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி திருவிழாவாக ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்பட்டு
வருகிறது.