முசிறியில் சாலை பாதுகாப்பு வார விழா

0 331
Stalin trichy visit

முசிறி புதிய பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்டாட்சியர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, போக்குவரத்து கழக கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா, தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தையும், ஹெல்மெட் அணிவது கட்டாயம், சாலையில் அலைபேசி பேசியபடி வாகனம் இயக்காதே, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர். போதையில் பயணம் பாதையில் மரணம், இருசக்கர வாகனம் இருவர் பயணிக்க மட்டுமே, ஓடும் பேருந்தில் ஏறாதே, படியில் பயணம் நொடியில் மரணம் என்ற அறிவுரைகளை கல்லூரி மாணவ, மாணவியரிடமும், பொதுமக்களிடமும் எடுத்துரைத்து அறிவுரை வழங்கினர். இதனை அடுத்து சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடமும் பொதுமக்களிடம் கோட்டாட்சியர் மாதவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

Leave A Reply

Your email address will not be published.