நந்தியாற்றில் தடுப்பணை அமைக்கும் பணி அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கணக்கிளியநல்லூர் கிராமத்தில் நீர்வள ஆதாரத்துறையின் நந்தியாற்றின் குறுக்கே 9.24 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே என்.நேரு இன்று (23.01.2023) அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.பிரதீப் குமார்., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செ. ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.ந. தியாகராஜன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் திரு. எஸ்.ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் எம் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நித்தியானந்தன், மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன்,. வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.