தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பில் மறியல்
திருச்சி, ஜன.24 திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசன்பேட்டையில் ஏ.ஐ.டி.யு.சி சங்கம் சார்பில் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டியும், நல வாரியத்தில் வழங்கப்படும் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டியும், உள்ளாட்சி பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரியும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு எப்.சி. காலங்களில் ஆந்திரா மாநிலம் போல் ரூ.10 ஆயிரம் நிதி வழங்க வலியுறுத்தி கட்டட சங்க மாவட்ட தலைவர் எம்.முருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக சோமரசம்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்தும், அல்லித்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்தும் தொழிலாளர்கள் ஊர்வலமாக சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் மறியல் அறப்போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மறியல் போராட்டத்தில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்க தலைவர் மருதமுத்து ஆகியோரை போராட்டத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் சி.பி.ஐ முன்னாள் மாவட்ட பொருளாளர் பேரூர் ப.நடராஜன், சி.பி.ஐ. அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம், சி.பி.ஐ. அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் வீரமுத்து, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துலெட்சுமி, பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மருதம்பாள், கட்டட சங்கம் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், துணை தலைவர் முத்தழகு, தேசிய குழு உறுப்பினர் நிர்மலா, தரக்கடை சங்க மாவட்ட துணை தலைவர் மேகராஜ், உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் நதியா மற்றும் குமரேசன், ரஷ்யா பேகம், சந்திரா, பழனியம்மாள், லதா, நித்தியா, ஜான்சி ராணி , கலைச்செல்வன், விசாலாட்சி, லட்சுமி, பிரபா, மீனாட்சி, பிரேமா மற்றும் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சோமரசம்பேட்டை காவல்துறையினரால் கைது அருகிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.