கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம்
திருச்சி, ஜன.24 திருச்சி மாவட்டம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு, வெறிநோய் குறித்து விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஊராட்சி மன்றத் தலைவர் தாமோதரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா உள்ளிட்ட பலர் உள்ளனர்.