தா.பேட்டையில் நெல் கொள்முதல் நிலையம் :காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. திறப்பு

0 266
Stalin trichy visit

திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் திறந்து வைத்தார் .தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் விவசாயம் பிரதானமான தொழிலாக இருந்து வரும் நிலையில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர் இந்நிலையில் முசிறி தொகுதி எம்எல்ஏ ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதையடுத்து எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நெல் கொள்முதல் செய்து பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.