கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள கீழன்பில் பள்ளியில் திடீர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கட்டிடங்களின் உறுதித்தன்மை, மாணவர்களின் கற்றல் திறன், ஆய்வகம் போன்ற இடங்களில் விரிவான ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை கேட்டறிந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். கலந்துரையாடலின் போது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் வர இருக்கிற அரசு பொதுத்தேர்வை எவ்விதத்தில் எதிர்கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் அறிவுறுத்தி நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் உங்களுடைய கல்வி தொடர்பான தேவைகளை முதல்வரும் அரசும் செய்ய காத்திருக்கிறது என உறுதி கூறினார்
ஆய்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
கிராமத்தைச் சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்