அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

0 358
Stalin trichy visit

 

 

திருச்சி மாவட்டம் சமயபரும் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவினையொட்டி கடந்த 24ஆம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை யும், அன்று மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கல க பூஜையும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 27 ம் தேதி இன்று காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், புண்ணியாகவாசனம் பூஜையும், நான்காம் கால பூஜையும், இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கடங்கள் புறப்பாடும் காலை 8.30 மணிக்கு மூலவர் விமானம் பரிவார விமானங்கள் மற்றும் பரிவார மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழாவும் ,இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளி அம்மன் கும்பத்திற்கு புனித நன்னீராட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் , மாகாளிகுடி, நரசிங்கமங்கலம், மருதூர் ,இனம் சமயபுரம் ,வாளாடி ,மேலவளாடி ,லால்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.