அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர் விடுதி : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

0 247
Stalin trichy visit

திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தமிழக பள்ளி கல்வி  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், துணைமேயர் திவ்யா, முன்ளாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெறும்பூர் ஒன்றியக்குழு தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் கே.எஸ்.எம்.கருணாநிதி, தனித்துணை ஆட்சியர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலுமணி, வட்டாட்சியர் ரமேஷ், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.