லால்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 523
Stalin trichy visit

திருச்சி, பிப்.1 திருச்சி மாவட்டம்,  லால்குடி வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், மாந்துறை, வாளாடி, திருமங்கலம், எசனைக்கோரை, புதுக்குடி, மேலவாளாடி, முத்துராஜபுரம், தர்மநாதபுரம், மேலப்பெருங்காவூர், கீழப்பெருங்காவூர், சிறுமருதூர், அப்பாதுறை, டி.வளவனூர், தண்டாங்கோரை, வேலாயுதபுரம், கீழ்மாரிமங்கலம், நெய்குப்பை, புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.