துபாயில் சிக்கி உணவின்றி தவிப்பவர்களை மீட்க கோரிக்கை

0 406
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் உணவு, ஊதியமின்றி அவதி. தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புள்ளம்பாடி அருகே ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ்(37) இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன.

இந்நிலையில் கூலி வேலை பார்த்து வந்த பாக்கியராஜ். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜென்னி பிளாசா காம்ப்ளக்ஸில் வின்ஸ் டு ஈரோப் என்ற வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தை பாக்கியராஜ் தொடர்புகொண்டு துபாயில் உணவு ஆர்டர்களை எடுத்து டெலிவரி செய்யும் பணியில் கடந்த இரண்டு மாதமாக ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் சேர்த்து புள்ளம்பாடி, திருச்சி மாநகர் அரியலூர் என 13 பேர் வெளிநாட்டிற்கு தல ஒரு லட்ச ரூபாய் வீதம் கட்டி சென்றுள்ளனர்.

இந்நிலையில் துபாயில் உள்ள நிறுவனம் கடந்த 10 நாட்களாக இவர்களுக்கு உணவு கொடுக்காமலும் தங்குவதற்கு இடம் தராமலும் இரண்டு மாதமாக பணி செய்தும் தங்களுக்கு ஊதியம் வழங்காமலும் இருந்து வருகின்றனர். மேலும் பாக்கியராஜ் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டு கால்களில் காயம் அடைந்துள்ளது. இதற்கு எவ்வித உதவியும் அந்நிறுவனம் செய்யாமல் உணவு கொடுக்காமல் பணிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் வெளிநாட்டு சென்றவர்கள் தாங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அங்கு பணிபுரியும் நிறுவனத்திடம் கூறியுள்ளனர் அவர்கள் பாஸ்போர்ட் தராமல் நீங்கள் இங்கே தான் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் மேலும் இது குறித்து திருச்சியில் உள்ள வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு அப்படித்தான் இருக்கும் நீங்கள் அங்கே தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் செய்வதறியாது தாங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று துபாயிலிருந்து வீடியோ பதிவை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சண்முகப்பிரியாவின் மனைவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமாரிடம் தங்களது உறவினர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.