பெண்ணை தாக்கிய சமூக ஆர்வலர் கைது

0 308
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் அருகே ஜங்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான  சண்முகம் (57) இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு நாய்களும், கோழிகளும் வளர்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சிவகாமசுந்தரி( 68). இவர் ஒரு நாய் மற்றும் சில கோழிகளும் வளர்த்து வருகிறார்.
சண்முகம் தான் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்கள் மட்டுமல்லாது தெருவில் வளரும் 10க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சண்முகம் வளர்க்கும் இரண்டு நாய்கள் மட்டுமல்லாது தெருவில் உள்ள ஒரு நாய் சிவகாமிசுந்தரியின் கோழியை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவகாமிசுந்தரி, சண்முகத்திடம் சண்டையிட்டு உள்ளார். இதில் சண்முகம் சிவகாமசுந்தரியை தகாத வார்த்தைகளில் பேசி தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சிவகாமசுந்தரி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சண்முகசுந்தரத்தை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.