திருவாசி ஊராட்சியில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

0 266
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் திருவாசி கிராம ஊராட்சியில் இன்று 09.02.2023 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்தும், வேளாண்மை உழவர் நலத்துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத் திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) திருமதி.சாந்தி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.
வேளாண்மை உழவர் நலத் துறையில் நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ஜெயராணி உரை ஆற்றினார். துறைகளின் சார்பாக ஊராட்சி செயலர் காமாட்சி நன்றி உரை ஆற்றினார். விவசாயிகளின் சார்பாக முன்னோடி விவசாயி சேகர் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் பாண்டீஸ்வரி சுப்பாபிள்ளை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். .

Leave A Reply

Your email address will not be published.