ஈச்சம்பட்டியில் ஏரி சீரமைப்பு தொடக்க விழா

0 287
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள ஈச்சம்பட்டி ஏரியில் சீரமைப்பு தொடக்க விழாவை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள “ஏரியை சீரமைக்கும் பணிகளை கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாய சங்கம், அசோக் ராஜா பவுண்டேஷன், விவசாயிகள்,பொதுமக்கள் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏரியை தூர்வார முடிவெடுத்து அதன் தொடக்க விழா இன்று பூமி பூஜையுடன் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பூமி பூஜை செய்து சீரமைக்கு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கடைமடை பகுதியில் ஒருங்கிணைந்த விவசாய சங்கம் அசோக் ராஜா பவுண்டேஷன் நிறுவனர் அசோக் ராஜா திமுக. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பல. கலந்து கொண்டனர்!

Leave A Reply

Your email address will not be published.