அரசு பள்ளியை சூழ்ந்த கழிவு நீர் : மாணவர்கள் அவதி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை சுற்றி சூழ்ந்த கழிவு நீரால் மாணவர்கள் அவதி.
கலக்குடியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி மற்றும் பள்ளியை சுற்றிலும் மழை நீர் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்துள்ளது.இதனால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மிகுந்த சிரவத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர், லால்குடி கோட்டாட்சியர், மற்றும் லால்குடி வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் அங்கு வந்து பார்வையிட்டு கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறினார். இதுவரை அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கான வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கழிவு நீர் வடிவில் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சாக்கடை நீர் வீடுகளில் புகுந்து விடுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு முன்பாக தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரை உடனே அகற்றி அப்பகுதியில் கழிவுநீர. வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.