சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஊர்தி பேரணி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் 2023ஆம் ஆண்டு சிறுதானியம் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை போற்றும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பூனாம்பாளையம் கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் சிறுதானியங்கள் சாகுபடி குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்.
நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி உரை ஆற்றினார்.
மேலும் சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஊர்திகளை முறையே ஊராட்சி மன்ற தலைவர், திருச்சி மாவட்டம் வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதுசமயம் வேளாண்மை துணை அலுவலர் சின்னபாண்டி, மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பூபதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.